கருத்தாளர்களுக்கு பயிற்சி


கருத்தாளர்களுக்கு பயிற்சி
x

கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழக அரசு பள்ளி கல்வி துறையின் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கான உயர் கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டி பயிற்சி வழங்குவது குறித்து பெரம்பலூர் மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி வகுப்பு முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் வழிகாட்டுதலின் பேரில், பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2 நாட்கள் நடந்தது. பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார். மேலும் மாநில கருத்தாளர்களான விரிவுரையாளர்கள் சீரங்கன், உமாதேவி, முதுநிலை ஆசிரியர்கள் அறிவேந்தன், முத்தமிழ்செல்வன், சக்தி சரவணன் ஆகியோர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி வழங்குவதற்கு பள்ளியில் கருத்தாளர்களாக உள்ள 56 முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினர்.


Next Story