'ஸ்மார்ட் காவலன்' செயலி குறித்து போலீசாருக்கு பயிற்சி
ஆலங்குளத்தில் ‘ஸ்மார்ட் காவலன்’ செயலி குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தென்காசி
ஆலங்குளம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து போலீசாரின் பணிகளை கண்காணிக்கும் வகையில் 'ஸ்மார்ட் காவலன்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஆலங்குளம் போலீஸ் துணை கோட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டது. ஆலங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா கலந்து கொண்டு போலீசாருக்கு புதிய செயலி குறித்து பயிற்சி அளித்தார். புதிய செயலி செயல்படும் விதம், குற்றவாளிகளின் பதிவுகளை அறியும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story