வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
சங்கராபுரத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். சின்னசேலம் தேர்தல் துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தேர்தல் துணை தாசில்தார் பசுபதி அனைவரையும் வரவேற்றார். வருகிற 12.11.22, 13.11.22 மற்றும் 26.11.22, 27.11.22 ஆகிய 4 நாட்கள் நடைபெற இருக்கும் வாக்காளர் சிறப்பு சுருக்கத்திருத்த முகாமில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும், வாக்காளர்பட்டியலில் வாக்காளர்களின் ஆதார் எண் இணைக்கும் பணியை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிநிலை முகவர்கள் 605 பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story