தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்களுக்கு பயிற்சி


தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்களுக்கு பயிற்சி
x

ராணிப்பேட்டையில் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் வேலூர் மாநகராட்சியை சேர்ந்த அனைத்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்களுக்கான பயிற்சி ராணிப்பேட்டை அன்-நூர் மஹாலில் நடந்தது. வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பெ.குபேந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் மண்டல செயற் பொறியாளர் பா.ரூபன் சுரேஷ் பொன்னையா, ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் அலுவலக ஆலோசகர்கள் சந்திரசேகர், எலிசபெத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீடித்த தொடர் வளர்ச்சி அமைப்பின் பொறுப்பாளர்கள் டாக்டர்கள் அருண் செந்தில், முரளி நாகராஜ் மற்றும் அன்பரசன் ஆகியோர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பயிற்சி அளித்தனர்.

கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பயிற்சி கையேடு, மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் துப்புரவு அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார்.


Next Story