பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி


பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
x

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பயிற்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணிகள், கடமைகள், பொறுப்புகள் மற்றும் போதைப்பொருட்களை தவிர்த்து பாதுகாப்பாக இருப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் அருள்மொழி நன்றி கூறினார்.


Next Story