தன்னார்வலர்களுக்கு பயிற்சி
தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி சார்ந்து தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு வட்டார அளவிலான இரண்டாம் கட்ட 2 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை மேற்பார்வையாளர் கண்ணதாசன் தொடங்கி வைத்தார். பயிற்சியின்போது வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ் மற்றும் ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்து, திட்டம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கினர். தொடக்க நிலை பயிற்சியானது அந்தந்த குறு வள மையங்களிலும், உயர் தொடக்க நிலை பயிற்சியானது 5 மையங்களிலும் நடைபெற்றது. இதில் அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்கள், 15 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 5 பட்டதாரி ஆசிரியர்கள் கருத்தாளர்களாக இருந்து பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் 532 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணிலூர்துசேவியர் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் இளையராஜா மற்றும் ராஜலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.