வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து பயிற்சி


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து பயிற்சி
x

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து வாக்கு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமை தாங்கினார். நாட்டறம்பள்ளி பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 223 பேர் பங்கேற்றனர். பயிற்சியின் போது தேர்தல் துணை தாசில்தார் நிர்மலா, வருவாய் ஆய்வாளர்கள் கவுரி, அன்னலட்சுமி மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story