ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் வளர்த்தல் குறித்த பயிற்சி


ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் வளர்த்தல் குறித்த பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் வளர்த்தல் குறித்த பயிற்சி நடந்தது.

கரூர்

தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் வளர்த்தல் குறித்து பயிற்சி 2 மையங்களில் தனித்தனியாக நடந்தது. எளிய முறையில் மாணவர்கள் மத்தியில் எப்படி ஆங்கில மொழியை கற்பிப்பது, பேசுவது, எழுத வைப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் தோகைமலை வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜகுமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story