மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் பெறுவது குறித்து பயிற்சி
மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவாரூர்
தமிழகத்தில் விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற, அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றுக்கு நகர் ஊரமைப்பு துறையின் அனுமதி பெறுவது கட்டாயம். இதற்கு விண்ணப்பித்தல் மற்றும் ஒப்புதல் வழங்குவதற்கு ஆன்லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூரில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த நகர் ஊரமைப்பு பிரிவு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை இணை இயக்குனர் சிவப்பிரகாசம் தொடங்கி வைத்து பயிற்சிஅளித்தார். பயிற்சியின்போது இணையதளம் வாயிலாக மனைப் பிரிவுகளுக்கு விண்ணப்பம் செய்தல், கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்தல், மற்றும் அதற்கான கட்டணம் செலுத்த ஆணை வழங்குதல் போன்ற அனைத்து நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story