டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
நீடாமங்கலம் அருகே டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நீடாமங்கலம் அருகே டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
செயல் விளக்கம்
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில் களப்பயிற்சி மேற்கொண்டனர். இதையொட்டி தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் பங்கேற்றனர்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன், பெரியார் ராமசாமி ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினர்.
காண்டாமிருக வண்டுகள்
தொடர்ந்து அங்குள்ள நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிலத்தில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் அங்குள்ள விவசாயிகளுக்கு தென்னையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த பயன்படும் காண்டாமிருக வண்டு பொறி மற்றும் நெல்லில் பாதிப்பை ஏற்படுத்தும் குருத்துப் பூச்சியை கட்டுப்படுத்த உதவும் முட்டை ஒட்டுண்ணி அட்டையை பற்றியும் செயல்முறை விளக்கத்தை நிகழ்த்தி காட்டினர்.
வேளாண் அறிவியல்நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் சிலந்திப்பேன் தாக்கிய நெற் பயிர்களை மாணவிகளுக்கு காண்பித்து, அதை கட்டுப்படுத்தும் முறை குறித்தும் விளக்கினார்.