கிராம வளர்ச்சி குறித்து காணொலி காட்சி மூலம் பயிற்சி


கிராம வளர்ச்சி குறித்து காணொலி காட்சி மூலம் பயிற்சி
x

திருப்பத்தூரில் கிராம வளர்ச்சி குறித்து காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் குறித்து கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தொடர்பான வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்களுக்கான யூடியூப் பயிற்சி திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் நிலையான வளர்ச்சி இலக்கியங்களை உள்ளூர் மயமாக்குதல் குறித்தும், தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் காணொலி காட்சி மூலம் எடுத்து கூறப்பட்டது.

இந்த பயிற்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.சங்கர், ஜெ. மணவாளன், ஒன்றியக்குழு தலைவர், விஜியா அருணாச்சலம், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் ஏ.சி.சுரேஷ், செயலாளர் சரஸ்வதி ஜெயக்குமார், ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் எம்.ஜி. பூங்காவனம் ஆகியோர் கிராம வளர்ச்சி திட்டம் குறித்து பேசினார்கள். கிராம ஊராட்சி, வட்டார, மாவட்ட அளவிலான பிரதிநிதிகள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கூறுகையில் கிராம வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் என அவர்களே கிராம வளர்ச்சிக்கு தேவையான திட்டத்தை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அனுப்பும் திட்டத்திற்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டு கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடையும் என அவர் தெரிவித்தார். இன்றும் (வெள்ளிக்கிழமை)பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.


Next Story