காலை உணவு திட்டம் குறித்து மகளிர் குழுவினருக்கு பயிற்சி


காலை உணவு திட்டம் குறித்து மகளிர் குழுவினருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 19 May 2023 12:45 AM IST (Updated: 19 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

காலை உணவு திட்டம் குறித்து மகளிர் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவாரூர்

நன்னிலம் வட்டாரத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களின் மூலம் காலை உணவு தயாரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக நன்னிலம் அருகே ஆலங்குடியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு உணவு தயாரித்தல் மற்றும் பதிவேடுகள் பராமரிப்பிற்கு 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது. இதை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வடிவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரமான உணவு தயாரிப்பது, பதிவேடுகள் பராமரிப்பது மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். இதில் மகளிர் சுயஉதவிகுழு வட்டார இயக்க மேலாளர் ஜெயப்பிரியா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முதன்மை பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.


Next Story