விதைப்பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி
விதைப்பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் காஞ்சிகுடி காட்டில் உள்ள மாநில விதைப்பண்ணையில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவிகள் அங்குள்ள வேளாண் அதிகாரி ராஜகுருவுடன் கலந்துரையாடினார். அவர் விதை பண்ணையின் வடிவமைப்பு, செயல்முறை மற்றும் நோக்கம் ஆகியவற்றை பற்றி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். விதைப்பண்ணையின் முக்கிய நோக்கம் ஆதார நிலை விதைகளை உற்பத்தி செய்தல் மற்றும் விவசாயிகளுக்கு அளித்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும்் கலைஞரின் அனைத்து கிராமப்புற ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்காக 30 ஆயிரம் நெட்டை ரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பயிரிடப்பட்டுள்ளது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story