திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான கவிதா பேசுகையில், மாணவர்கள் சேவை பணியில் தங்களை அர்ப்பணித்து கொள்வது குறித்து விளக்கி கூறினார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ செயலர் அருண் ராஜா சிங் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பார்வதி தேவி நன்றி கூறினார்.

---


Next Story