13 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்


13 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்
x

வேலூர் தாலுகாவில் 13 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்

வேலூர் தாலுகாவில் பணிபுரிந்து வரும் 13 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவற்றின் விவரம் வருமாறு:-

பென்னாத்தூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லட்சுமிகாந்தம் மூஞ்சூர்பட்டுக்கும், அங்கு பணியாற்றிய ரீனா அல்லாபுரத்துக்கும், அங்கு பணியாற்றிய சுரேஷ் பென்னாத்தூருக்கும், கணியம்பாடியில் பணியாற்றிய லலிதா தொரப்பாடிக்கும், அங்கு பணியாற்றிய வடிவேல் கணியம்பாடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அப்துல்லாபுரத்தில் பணியாற்றிய விஜய் துத்திப்பட்டுக்கும், சேண்பாக்கத்தில் பணியாற்றிய சர்மிளா அப்துல்லாபுரத்துக்கும், வெட்டுவாணத்தில் பணியாற்றிய தங்கமுத்து பூதூருக்கும், கருங்காலியில் பணியாற்றிய கிருஷ்ணவேணி கீழ்கிருஷ்ணாபுரத்துக்கும், மேல்அரசம்பட்டில் பணியாற்றிய குமரேசன் சின்னப்பள்ளி குப்பத்துக்கும், செதுவாலையில் பணியாற்றி அன்பு மேல்அரசம்பட்டிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை வேலூர் உதவி கலெக்டர் கவிதா பிறப்பித்துள்ளார்.


Next Story