8 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 25 பேர் இடமாற்றம்
நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் பிரிவில் 8 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் பிரிவில் பணியாற்றிய 8 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 17 போலீஸ்காரர்கள் என 25 பேரை போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நத்தம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் பழனி அடிவாரத்துக்கும், வேடசந்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களில் தர்மேந்திரா ரெட்டியார்சத்திரத்துக்கும், சுப்புராஜ் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், வடமதுரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், சுப்பிரமணி ஆகியோர் பழனி நகருக்கும், அம்மைநாயக்கனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களில் சிவபாலன் ஒட்டன்சத்திரத்துக்கும், ராமு பானி நகருக்கும், ஒட்டன்சத்திரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சாமிநாதபுரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தவிர 17 போலீஸ்காரர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.