4 ஏ.டி.ஜி.பி.க்கள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

4  ஏ.டி.ஜி.பி.க்கள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
x

4 ஏ.டி.ஜி.பி. க்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

சென்னை,

4 ஏ.டி.ஜி.பி. க்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

சிபிசிஐடி ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அபய்குமார் சிங், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல் தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக இருந்த வெங்கட்ராமன், சிபிசிஐடி ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் நிர்வாகப் பிரிவு, காவல்துறை தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த எச்.எம்.ஜெயராம், சென்னை காவல்துறை செயல்பாட்டு பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story