தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
x

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை வடக்கு சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த மாதவன், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சைபர் கிரைம் கண்காணிப்பாளராக இருந்த அசோக்குமார், கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதிவாணன்- கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புக்யா சினேகா பிரியா - மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஸ்கரன் - தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரேயா குப்தா - விளாத்திகுளம் உதவி எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story