6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 17 Jun 2023 1:00 AM IST (Updated: 17 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

சேலம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சாவித்திரி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், மத்திகிரி சர்க்கிள் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம், மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேன்கனிக்கோட்டை

அதே போல கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இனஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி சர்க்கிள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் சர்க்கிள் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராஜேஸ், நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எஸ்.ராஜேஸ்வரி பிறப்பித்துள்ளார்.


Next Story