விழுப்புரம் உட்கோட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் 6 பேர் இடமாற்றம்
விழுப்புரம் உட்கோட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்
விழுப்புரம் காவல் சரக உட்கோட்டத்தில் தனிப்பிரிவு போலீசாராக பணியாற்றி வந்தவர்கள், உட்கோட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வளவனூர் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கண்டாச்சிபுரத்திற்கும், விக்கிரவாண்டி தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரவடிவேல் திருவெண்ணெய்நல்லூருக்கும், அங்கிருந்த தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு கலையரசன் நகர போலீஸ் நிலையத்திற்கும், கண்டாச்சிபுரம் தனிப்பிரிவு ஏட்டு சிவா விக்கிரவாண்டிக்கும், விழுப்புரம் நகர தனிப்பிரிவு ஏட்டு ராமசாமி கண்டமங்கலத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story