வேலை வாய்ப்பு அலுவலகம் இடமாற்றம்


வேலை வாய்ப்பு அலுவலகம் இடமாற்றம்
x

பாளையங்கோட்டை சிதம்பரம் நகருக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், பாளையங்கோட்டை பெருமாள்புரம் 'சி' காலனி சிதம்பரம் நகர் 17-சி என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த மாதத்துக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள இளைஞர்கள் உரிய சான்றுகளுடன் வரலாம். வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற டெலிகிராம் சானலில் இணைந்து பயன்பெறலாம்.

இதுதவிர போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் www.tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து போட்டி தேர்வுக்கான பாட குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்து உள்ளார்.


Next Story