விழுப்புரம் மாவட்டத்தில்11 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்


விழுப்புரம் மாவட்டத்தில்11 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 11 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மயிலம் ரவி மரக்காணத்திற்கும், அங்கிருந்த நடராஜன் வானூருக்கும், வானூர் முருகன் ஒலக்கூருக்கும், அங்கிருந்த சீத்தாலட்சுமி செஞ்சிக்கும், செஞ்சியில் இருந்த கேசவலு திருவெண்ணெய்நல்லூருக்கும், அங்கிருந்த முபார்அலிபேக் விக்கிரவாண்டிக்கும், விக்கிரவாண்டி நாராயணன் முகையூருக்கும், கண்டமங்கலம் சண்முகம் முகையூருக்கும், மேல்மலையனூர் சிலம்புச்செல்வன் வல்லத்திற்கும், அங்கிருந்த குலோத்துங்கன் மேல்மலையனூருக்கும், மேல்மலையனூரில் இருந்த தேவராஜ் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மேல்மலையனூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த சிவக்குமார் பதவி உயர்வு பெற்று கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மயிலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவதாஸ் பதவி உயர்வு பெற்று அதே ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், செஞ்சி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த சரவணக்குமார் பதவி உயர்வு பெற்று மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story