சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டார்.
ஆமத்தூர்
அதன் விவரம் வருமாறு:-
ஆமத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளைச்சாமி கட்டனூர் போலீஸ் நிலையத்திற்கும், கட்டனூரில் பணியாற்றும் சரவணராஜ், பரளச்சி போலீஸ் நிலைய பொறுப்பிலும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தூர் டவுனில் பணியாற்றும் பாண்டியன், வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும் அங்கு பணியாற்றும் ஹரிராம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கும், எம்.ரெட்டியபட்டியில் பணியாற்றும் ஆனந்தகுமார் பந்தல்குடி போலீஸ் நிலையத்திற்கும், பந்தல்குடியில் பணியாற்றும் அஜிஸ் எம். ரெட்டியபட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கூமாப்பட்டி
வச்சக்காரப்பட்டியில் பணியாற்றும் திருநாவுக்கரசு, விருதுநகர் ஊரக போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் வீராசாமி ஆகிய இருவரும் கூமாப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், சேத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அக்னீஸ்வரன் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், வச்சக்காரப்பட்டியில் பணியாற்றும் அங்காளேஸ்வரன் விருதுநகர் ஊரக போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல தளவாய்புரத்தில் பணியாற்றும் கவுதம் விஜய் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும், கூமாபட்டியில் பணியாற்றிய கருத்தபாண்டி வத்திராயிருப்புக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்டு சேத்தூர் ஊரக போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.