துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் 32 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை
தமிழகம் முழுவதும் 32 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த விஸ்வேஸ்வரய்யா ராணிப்பேட்டை மாவட்ட தலைமையிடத்து உதவி போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் தலைமையிடத்து பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பாஸ்கரன் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சவுந்தரராஜன் திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னையில் பணியாற்றி வந்த ஸ்டீபன் திருவண்ணாமலை மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story