தூத்துக்குடி மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்


தூத்துக்குடி மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள உத்தரவு ஆணையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் தாசில்தார் நிலையில் நிர்வாகம் நலன் கருதி பணிமாறுதல்களும், நியமனங்களும் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி தூத்துக்குடி சிப்காட் அல்லிகுளம் நிலம் எடுப்பு முன்னாள் தனி தாசில்தார் சந்திரன் விடுப்பில் இருந்தார். அவர், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். சிப்காட் தனி தாசில்தாராக இருந்த தங்கையா கயத்தாறு தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிப்காட் அல்லிகுளத்தில் முன்பு தனி தாசில்தாராக இருந்த எஸ்.சேதுராமன் தற்போது விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு வந்த நிலையில், தூத்துக்குடி-மதுரை புதிய அகல ரெயில் பாதை திட்டத்திற்கு நிலம் எடுப்பு தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கு பணியில் இருந்த ராஜசெல்வி தூத்துக்குடி சிப்காட் அல்லிகுளம் அலகு 8-ல் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி சிப்காட் அல்லிகுளம் அலகு 8-ல் தனி தாசில்தாராக பணியாற்றிய செல்வகுமார், தூத்துக்குடி டாஸ்மாக் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். டாஸ்மாக் உதவி மேலாளராக இருந்த கோபாலகிருஷ்ணன் தூத்துக்குடி தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். திருச்செந்தூர் முன்னாள் தனி தாசில்தார் செந்தூர்ராஜன், சாத்தான்குளம் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பணியிட மாற்றம், புதிய நியமனம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக பணிக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story