வேறு கோர்ட்டுக்கு விசாரணை மாற்றம்: பரமக்குடி சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜாமீன் ரத்து- உடனடியாக சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு


வேறு கோர்ட்டுக்கு விசாரணை மாற்றம்:  பரமக்குடி சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜாமீன் ரத்து- உடனடியாக சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
x

16 வயது சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரமக்குடி அ.தி.மு.க. கவுன்சிலரின் ஜாமீனை ரத்து செய்து உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்க மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை


16 வயது சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரமக்குடி அ.தி.மு.க. கவுன்சிலரின் ஜாமீனை ரத்து செய்து உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்க மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

சிறுமி பலாத்காரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி (வயது 44). ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் பரமக்குடியை சேர்ந்த 2 பெண்கள் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் இருவரும் 16 வயது மாணவி ஒருவரை கவுன்சிலர் சிகாமணியிடம் அறிமுகப்படுத்தினர்.

இதையடுத்து சிகாமணி, அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பரான மறத்தமிழர் சேனை அமைப்பின் மாநிலத் தலைவர் புதுமலர் பிரபாகரன் (42), மாதவன் நகரைச் சேர்ந்த ராஜாமுகமது (36) ஆகியோர் பார்த்திபனூரில் ஓர் அறையில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதன் பேரில் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

கவுன்சிலர் கைது

இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைத்து மகளிர் போலீசார், போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது மற்றும் அந்த 2 பெண்கள் என 5 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் சிகாமணிக்கு மாவட்ட கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றத்தின் தீவிர தன்மை

அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் நம்பி செல்வன் ஆஜராகி, பாதிக்கப்பட்ட சிறுமி கூட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார். இதில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சிகாமணிக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன்பாக அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மை மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை கீழ் கோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை. இது சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களுக்கு முரணாக உள்ளது என்று வாதாடினார்.

ஜாமீன் ரத்து

விசாரணை முடிவில், பரமக்குடி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story