ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றம்


ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றம்
x

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.‌ ராணிப்பேட்டை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பதிவுதாரர்களின் பதிவுகள், வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள பதிவு தாரர்கள் அவரவர் முகவரி எந்த மாவட்ட எல்லைக்குள் வருகிறது என்பதை அறிந்து ராணிப்பேட்டை மாவட்டமாக இருப்பின் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சரி பார்த்து கொள்ள வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story