சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்


சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x

மணல் கடத்தியவருக்கு சாதகமாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பாலாறு, சிற்றாறு களிலிருந்து வாகனங்களில் அடிக்கடி மணல் கடத்தல் நடப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். எனவே மணல் கடத்தலை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் பாலகிருஷ்ணன், போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மணல் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

இநத்நிலையில் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் கடந்த சில நாட்களுக்கு முன் சோமலாபுரம் பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த விசாரணையைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகனை ஆயுதப்படைக்கு மாற்றி அவர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story