புதர்களின் நடுவில் மின்மாற்றி


புதர்களின் நடுவில் மின்மாற்றி
x

புதர்களின் நடுவில் மின்மாற்றி

திருப்பூர்

போடிப்பட்டி

குமரலிங்கம் ராஜவாய்க்கால் அருகில் உள்ள மின் மாற்றி முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது. இந்த மின் மாற்றியைச் சுற்றிலும் புதர் போல செடிகள் முளைத்துக் காணப்படுகிறது.அதிலும் கொடி படர்வதற்கான கொழு கொம்பாக மின் மாற்றியின் சிமெண்டு தூணையே பயன்படுத்தி படர்கிறது.

இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதுடன், ஒருசிலர் அசுத்தம் செய்கின்றனர்.புதர் மண்டிக் கிடப்பதால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியேறி மின் வாரிய ஊழியர்களுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.எனவே விபத்துக்கள் ஏற்பட்டு மின் இணைப்பு துண்டிப்பு, உயிரிழப்பு போன்ற விபரீதங்கள் நடக்கும் முன்பாக இந்த பகுதியை சுத்தம் செய்யவும் மின்மாற்றியை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story