சாய்ந்துள்ள மின்மாற்றியால் விபத்து ஏற்படும் அபாயம்


சாய்ந்துள்ள மின்மாற்றியால் விபத்து ஏற்படும் அபாயம்
x
திருப்பூர்


குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது விருகல்பட்டி ஊராட்சி. விருகல்பட்டி ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மின்மாற்றி(டிரான்ஸ்பார்மர்) மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனைச்சுற்றி குடியிருப்புகள் உள்ளன. மேலும் உயர் அழுத்த மின் கம்பிகள் மின்மாற்றியில் இணைக்கப்பட்டுள்ளன.

ஏதாவதுபழுது ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏரி சரி செய்ய பயப்படும் நிலையில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மின்மாற்றி சாய்ந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும். அல்லது அருகில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனப்பகுதி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story