புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்


புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்
x

பி.அக்ரஹாரத்தில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மரை ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அஞ்சேஅள்ளி ஊராட்சி பி.அக்ரஹாரத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் வித்யா முன்னிலை வகித்தார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு டிரான்ஸ்பார்மரை தொடங்கி வைத்தார். இதில் பா.ம.க .மாவட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞர் சங்க மாநில துணைத்தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், மின்வாரிய பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story