பர்கூர், போச்சம்பள்ளி துணை மின் நிலையங்களில் ரூ.3¼ கோடியில் திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகள்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


பர்கூர், போச்சம்பள்ளி துணை மின் நிலையங்களில் ரூ.3¼ கோடியில் திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகள்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் மற்றும் போச்சம்பள்ளி மின் நிலையங்களில் ரூ.3¼ கோடி மதிப்பில் திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகளின் செயல்பாடுகளை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மின்மாற்றிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் போச்சம்பள்ளி துணை மின் நிலையங்களில் ரூ.3 கோடியே 35 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் மின்மாற்றிகள் திறன் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பர்கூர் துணை மின் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, செல்லக்குமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தடையில்லா மின்சாரம்

பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மின்சாரத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதன்படி, பர்கூர் துணை மின் நிலையத்தில் குறைந்த மின் அழுத்த மற்றும் கூடுதல் மின் பளு குறைப்பாட்டை சரி செய்ய ரூ.1 கோடியே 26 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் 10 எம்.வி.ஏ. திறன் மின்மாற்றி, 16 எம்.வி.ஏ. திறனாக ஆக உயர்த்தப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பர்கூர் பேரூராட்சி, மாதேப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, ஒப்பதவாடி, எமக்கல்நத்தம், காரகுப்பம் அதன் சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும். இதே போல் போச்சம்பள்ளி துணை நிலையத்திலும் ரூ.2 கோடியே 9 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் 16 எம்.வி.ஏ. திறன் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போச்சம்பள்ளி வடமாண்டப்பட்டி, வயலூர் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் பயன் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, செயற்பொறியாளர்கள் இந்திரா, முத்துசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், முன்னாள் எம்.பி. சுகவனம், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், பர்கூர் தாசில்தார் பன்னீர்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாராணி கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, கவுன்சிலர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிங்காரப்பேட்டை

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை துணை மின் நிலையத்தில் புதிய கூடுதல் மின்மாற்றியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து துணை மின் நிலையத்தில் ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டினார். திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஏழுமலை, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன், செயற்பொறியாளர் அருள் பாண்டியன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ராதாகிருஷ்ணன், தி.மு.க. நகர அவைத்தலைவர் தணிகை குமரன், ஒன்றிய பொருளாளர் குமார், முன்னாள் கவுன்சிலர் சத்தியநாராயண மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story