19 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவு


19 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவு
x

ஈரோடு மாவட்டத்தில் 19 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 19 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார்.

19 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள்

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வரும் 19 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி பங்களாப்புதூருக்கும், தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மதிவாணன் ஈரோடு டவுன் குற்றப்பிரிவுக்கும், சபியுல்லா வீரப்பன்சத்திரத்துக்கும், ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய செல்வம் வீரப்பன்சத்திரத்துக்கும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ராம்பிரபு, பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய செந்தில்குமார் ஆகியோர் ஈரோடு மாவட்ட தனிப்பிரிவுக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அருள்சாமி கொடுமுடிக்கும், அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய வெங்கடாசலபதி சித்தோட்டுக்கும், ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கோவிந்தராஜ் பர்கூருக்கும், தாளவாடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சின்னசாமி ஆப்பக்கூடலுக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கட்டுப்பாடு அறை

பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஆறுமுகம் கோபிசெட்டிபாளையத்துக்கும், பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிவாஜி கோபிசெட்டிபாளையத்துக்கும், பர்கூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சந்திரன் வரப்பாளையத்துக்கும், சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சோபியா கவுந்தப்பாடிக்கும், கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சின்னராஜ் பவானிசாகருக்கும், புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ரத்தினம் தாளவாடிக்கும், சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ராஜமாணிக்கம் சிறுவலூருக்கும், கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய வசந்தகுமார், வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய குமரேஷ் ஆகியோர் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story