ஆபத்தான நிலையில் மின்மாற்றி


ஆபத்தான நிலையில் மின்மாற்றி
x

திருத்துறைப்பூண்டி அருகே பருத்திச்சேரியில் ஆபத்தான நிலையில் மின்மாற்றி உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே பருத்திச்சேரியில் ஆபத்தான நிலையில் மின்மாற்றி உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆபத்தான நிலையில் மின்மாற்றி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மணலி ஊராட்சி பருத்திச்சேரியில் திருத்துறைப்பூண்டி -திருவாரூர் மெயின் ரோட்டில் பள்ளிக்குளம் அருகே மின்மாற்றி உள்ளது. இதன் அடிப்பகுதி சேதம் அடைந்து, மின்மாற்றி சாயும் ஆபத்து உள்ளது.

அங்கு உள்ள குளத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மின்மாற்றி அருகே எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ளது. குளத்தின் அருகில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் மின்மாற்றி ஆபத்தான நிலையில் இருப்பது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கு அச்சத்தை ஏறபடுத்தி உள்ளது.

ஆபத்தான நிலையில் மின்மாற்றி

இதுதொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மின்மாற்றியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story