ஆபத்தான நிலையில் மின்மாற்றி


ஆபத்தான நிலையில் மின்மாற்றி
x

ஆபத்தான நிலையில் மின்மாற்றி உள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சியில் குத்தாலம்-பந்தநல்லூர் பிரதான சாலையின் அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியில் உள்ள மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. இதன் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் மின்மாற்றியில் உள்ள மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலோ அல்லது மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்தாலோ பெரும் விபத்து ஏற்படும் என்பதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்றியில் சேதம் அடைந்த கம்பங்களை அகற்றி விட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story