புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள்


புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்களை ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் தொகுதிக்குட்பட்ட பூனப்பள்ளி ஊராட்சி சின்னபேளகொண்டப்பள்ளி மற்றும் அச்செட்டிப்பள்ளி ஊராட்சி சூடகொண்டப்பள்ளி ஆகிய இடங்களில் 100 கே.வி. கொள்ளளவு கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதில், ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன், உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story