வாலிபரிடம் நகை பறித்த திருநங்கை கைது
கடலூரில் வாலிபரிடம் நகை பறித்த திருநங்கை கைது செய்யப்பட்டார்.
கடலூர்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரவணாநகரை சேர்ந்தவர் சுந்தரம் மகன் மோகன்ராஜ் (வயது 26). இவர் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஜவான்பவன் அருகில் கெடிலம் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த திருநங்கை யாஷிகா (25) என்பவர் மோகன்ராஜ் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும். இது பற்றி மோகன்ராஜ் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாஷிகாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story