திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்


திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் கடன் மேளா வருகிற 22-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் கடன் மேளா தென்காசி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 22-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. முகாமில் உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட அரசு ஆவணங்கள் இல்லை என்றால் அவற்றை வழங்குவதற்கும், வங்கி கடன் உதவி, சுய வேலைவாய்ப்பு முகாம், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்குதல், இலவச வீட்டுமனை பட்டா உள்ளவர்களுக்கு வீடு கட்டுவதற்கான திட்டம் மற்றும் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் திருநங்கைகள் விருப்பத்துக்கு ஏற்ப திறன் பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story