தாசில்தாரை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம்


தாசில்தாரை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம்
x

வாணியம்பாடியில் தாசில்தாரை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்பதற்காக அரசு சார்பில் வளையாம்பட்டு கூத்தாண்டவர் கோவில் அருகே மலையை ஒட்டியபடி உள்ள இடத்தை கொடுத்துள்ளனர், இதற்காக திருநங்கைகள் தங்கள் சொந்த பணம் சுமார் ரூ.2 லட்சத்துக்கு மேலாக செலவு செய்து அந்த இடத்தை குடியிருப்பு கட்டுவதற்காக தயார் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் தற்போது அந்த இடம் உங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்று தற்போது உள்ள தாசில்தார் சம்பத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தாலுகா அலுவலகம் வந்து தாசில்தாரை முற்றுகையிட்டு அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக தாசில்தார் மற்றும் போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story