கிராம உதவியாளர் பணிக்கு திருநங்கை தேர்வு


தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:15:46+05:30)

தமிழகத்தில் முதல் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு திருநங்கை தேர்வு செய்யட்டுள்ளார். அவருக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் தாலுகா மேலக்கரந்தை கிராம உதவியாளராக திருநங்கை ஸ்ருதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், தமிழகத்திலேயே இந்த பணிக்கு தேர்வான முதல் திருநங்கை ஆவார். இவருக்கு பணி நியமன ஆணையை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வருவாய் அலுவலர் (பொறுப்பு)மாரிமுத்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் உடனிருந்தனர்


Next Story