மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x

வேலூரில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட காதுகேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்க தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பொது செயலாளர் டெல்லி, துணைத் தலைவர் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் காதுகேளாதோர்களை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிக்க கூடாது. அரசு மற்றும் தனியாரில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்த வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து விசில் அடித்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story