கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை 52-ன்படி முறையாக வேலை வழங்கக் கோரியும், போட்டோ எடுக்க மாற்றுத் திறனாளிகளை காலை 7 மணிக்கு பணியிடத்துக்கு வர வழைப்பதை மாற்றி, காலை 9 மணிக்கு போட்ட எடுக்க அனுமதிக்க வலியுறுத்தியும், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலச் செயலாளர் முத்து காந்தாரி, ஒன்றிய துணை தலைவர் கருப்பையா, துணை செயலாளர் கண்ணன், கட்டுமானம் மாவட்ட துணைத ்தலைவர் தெய்வேந்திரன் ஆகியோர் பேசினர்.
பேச்சுவார்த்தை
போராட்டம் நடத்தியவர்களிடம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
கோரிக்கைகளை பரிசீலனை செய்து மாற்றுத்திறனாளிகள் போட்டோ எடுக்க காலை 9 மணிக்கு வரவழைப்பது பற்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சில மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.