கடலூர் பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்: வாலிபரை தாக்கி செல்போன் பறித்த திருநங்கைகள் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு


கடலூர் பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்:    வாலிபரை தாக்கி செல்போன் பறித்த திருநங்கைகள்    வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் வாலிபரை தாக்கி திருநங்கைகள் செல்போனை பறித்துச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

கடலூர்


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாவட்டத்திலேயே அதிக அளவில் கஞ்சா புழக்கம் உள்ள பகுதியான திருப்பாதிரிப்புலியூரில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்களும் அதிக அளவில் நடக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கடலூர் கம்மியம்பேட்டை சாலை வழியாக சென்ற வாலிபரை தாக்கி திருநங்கைகள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூரை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கடலூர் கம்மியம்பேட்டை சாலை வழியாக தனியாக நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 திருநங்கைகள் அந்த வாலிபரை வழிமறித்தனர். பின்னர் கீழே கிடந்த மரக் குச்சியை எடுத்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அவரது சட்டை பையில் இருந்த செல்போனை அவர்கள் பறித்தனர். இதில் அந்த வாலிபர் கூச்சலிட்டார். இதைபார்த்தும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டும் காணாமல் சென்று விட்டனர்.

இதனால் திருநங்கைகள் அந்த வாலிபரை தொடர்ந்து தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து அந்த வாலிபர், இதுவரை புகார் கொடுக்க முன்வராத நிலையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story