போக்குவரத்துக்கழக ஊழியர்கள்முற்றுகை போராட்டம்


போக்குவரத்துக்கழக ஊழியர்கள்முற்றுகை போராட்டம்
x

போராட்டம்

ஈரோடு

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற, மரணமடைந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். ஒப்பந்த நிலுவை தொகையை வழங்க வேண்டும். டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு சம்மேளன மண்டல செயலாளர் ஜான்சன் கென்னடி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் முருகையா, துணைச்செயலாளர் மாரப்பன் மற்றும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story