போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மாநிலங்களவையில் 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி,

மாநிலங்களவைவில் அமளியில் ஈடுபட்டதாக 19 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து எல்.பி.எப். போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோத்தகிரியில் பணிமனை முன்பு நேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story