போக்குவரத்து தொழிலாளர்கள் பேரவை கூட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் பேரவை கூட்டம்
x

போக்குவரத்து தொழிலாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினரின் 26-வது ஆண்டு பேரவை கூட்டம் மண்டல தலைவர் சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. முத்துராஜ் வரவேற்றார். துணைப்பொதுச்செயலாளர் கனக சுந்தர் பேரவையை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை வெள்ளத்துரையும், வரவு செலவு அறிக்கையினை கார்மேகமும் சமர்ப்பித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா, மாவட்ட தலைவர் மகாலட்சுமி வாழ்த்தி பேசினர். உதவி தலைவர் பிச்சை நிறைவுரையாற்றினார். தேர்தல் வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தொகை வழங்க வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன்பு பஸ்களை சீரமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மண்டல தலைவராக சுந்தரராஜ், பொதுச்செயலாளராக வெள்ளைத்துரை, பொருளாளராக கார்மேகம் மற்றும் 65 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில் பாண்டித்துரை நன்றி கூறினார்.


Next Story