அரசு மருத்துவமனையில் காயகல்ப பயிற்சி


அரசு மருத்துவமனையில் காயகல்ப பயிற்சி
x

கலவை அரசு மருத்துவமனையில் காயகல்ப பயிற்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவமனையில் காயகல்ப பயிற்சி டாக்டர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் சதீஷ் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அன்பாக பழக வேண்டும், தமிழக அரசு மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்பவர்களுக்கு ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு சான்றிதழ் வழங்கியுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து டாக்டர் இளங்கோ கூறினார். இதில் சந்தோஷ் குமார், செவிலியர்கள் தேவி, ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story