பயணிகள் புதிய நிழற்குடை


பயணிகள் புதிய நிழற்குடை
x

பரப்பாடி பாரதிநகரில் பயணிகள் புதிய நிழற்குடை- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

திருநெல்வேலி

இட்டமொழி:

பரப்பாடி பாரதிநகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் புதிய நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் இஸ்ரவேல் பிரபாகரன் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் அடிக்கல் நாட்டினார்.

காங்கிரஸ் வட்டாரத்தலைவர் ராமஜெயம், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் டபிள்யு.ராஜசிங், மாநில ஓ.பி.சி. பிரிவு துணைத்தலைவர் வக்கீல் காமராஜ், பொதுச்செயலாளர் ஜெஸ்கர் ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பத்மசிங் செல்வமீரான், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஜேக்கப் பாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை, தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் அருள்ராஜ் டார்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இட்டமொழி சி.எஸ்.ஐ. சர்ச் அருகே புதிய பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story