ஆதாரவற்றோர்களின் கூடாரமாக மாறிய பயணியர் நிழற்கூடங்கள்


ஆதாரவற்றோர்களின் கூடாரமாக மாறிய பயணியர் நிழற்கூடங்கள்
x

திருவண்ணாமலையில் நவீன வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்கூடங்கள் சுவரொட்டி ஒட்டும் இடமாகவும், ஆதரவற்றோரின் கூடாரமாகவும் மாறி வருவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நவீன வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்கூடங்கள் சுவரொட்டி ஒட்டும் இடமாகவும், ஆதரவற்றோரின் கூடாரமாகவும் மாறி வருவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நவீன வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடைகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பல்வேறு ஆசிரமங்களை காண்பதற்காகவும், கிரிவலம் செல்வதற்காகவும் பலர் வருகை தருகின்றனர். இதனால் திருவண்ணாமலை நகருக்கு நாளுக்கு நாள் மக்கள் வருகை அதிகரித்து வருகின்றது.

திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் வெளியூர் மக்களை கவரும் வகையில் கிரிவலப்பாதை மற்றும் போளூர் சாலையில் 8 இடங்களில் நவீன வசதியுடன் கூடிய பயணியர் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிழ்கூடங்களில் சூரிய மின்சக்தியால் (சோலார்) இயங்கும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவில் மின்தடை நேரத்திலும் நிழற்கூடங்கள் ஒளிர வசதி உருவானது.

ஆதாரவற்றோரின் கூடாரம்

திருவண்ணாமலை நகரின் சிறப்பு அம்சங்களின் புகைப்படங்கள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய படங்கள் அந்த நிழற்கூடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பயணிகள் அமரும் வகையில் இரும்பு இருக்கைகள் உள்ளன.

தற்போது இந்த நவீன பயணியர் கூடங்கள் சுவரொட்டி ஒட்டும் இடமாகவும், ஆதரவற்றோர்களின் இருப்பிடமாகவும் மாறியுள்ளது. இது பயணியர் நிழற்குடைகள் தானா என்று கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அதனை சுற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகிறது.

இவற்றை அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. நவீன வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த பயணியர் நிழற்குடைகளில் ஆதரவற்றோர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்கிரமித்துக்கொள்வதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் கிரிவலப்பாதை செங்கம் சாலையில் ரமணாஸ்ரமம் அருகில் உள்ள பயணியர் நிழற்குடையை இளநீர் விற்பனை செய்பவர் ஆக்கிரமித்து இளநீர் கடையை வைத்து விட்டார்.

இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் முதியவர்கள் முதல் பொதுமக்கள் பயணியர் நிழற்குடையில் அமர முடியாமல் தவிப்பதாக தெரிவிக்கின்றனர்.

எனவே மனநோயாளிகளை அப்புறப்படுத்தி அவர்களை காபங்பகத்தில் சேர்க்கவும்,சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story