சிறப்பு முகாமில் 250 கால்நடைகளுக்கு சிகிச்சை


சிறப்பு முகாமில் 250 கால்நடைகளுக்கு சிகிச்சை
x

சிறப்பு முகாமில் 250 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடைபெற்று வருகிறது. 4-வது நாளான நேற்று சின்னகல்லூப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு கூட்டுறவு சங்க தலைவர் மலர் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மண்டல இணை பதிவாளர் சி.பெ.முருகேசன் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். உதவி கால்நடை மருத்துவர் சுபாஸ்ரீ தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 250 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

முகாமில் துணை பதிவாளர்கள் சுப்பிரமணியன், சம்பத், சுவாதி, கூட்டுறவு சார்பதிவாளர் சண்முகம், மேலாண்மை இயக்குனர் தர்மேந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாளர் தண்டபாணி, கூட்டுறவு சங்க செயலாளர்கள் சம்பத், ஆனந்தன், கங்காதரன், வங்கி அலுவலர்கள் பாபு, பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Next Story